வழுவூர் விஜி கலியமூர்த்தியின் 36ஆம் ஆண்டு குருபூஜை! அனைத்துக் கட்சியினர் திரண்டு புகழஞ்சலி!
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், வழுவூரில் விஜி கலியமூர்த்தியின் 36ஆம் ஆண்டு குருபூஜை ஆராதனை விழா நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு மலர் மரியாதை செலுத்தி புகழஞ்சலி செலுத்தினர்.
தவெக நிர்வாகிகள் தலைமையில் விழா
தமிழக வெற்றிக் கழக நிர்வாகி விஜிகே. செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், விஜிகே. மணிகண்டன், விஜிகே. நெடுமாறன், சி.ஆர். ராகவமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர் கோபிநாத், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. ஜெயபால், திமுக மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.சி.என். விஜயபாலன், நடராஜன், சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சக்தி, பன்னீர்செல்வம், காட்டுமன்னார்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு
மேலும், இளைஞரணி செயலாளர் எஸ். கார்த்திகேயன், மாவட்டப் பொருளாளர் நவீன்ராஜ், மயிலாடுதுறை நகரச் செயலாளர் ராஜ்குமார், குத்தாலம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சதீஷ், குத்தாலம் மத்திய ஒன்றியச் செயலாளர் என்.இ. ஹரிஷ், குத்தாலம் வடக்கு ஒன்றியச் செயலாளர் ராஜ்குமார், குத்தாலம் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்டாலின், பாமக நிர்வாகிகள் ஐயப்பன், காசி பாஸ்கரன், விசிக மாவட்டச் செயலாளர் அன்பரசு உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் பொதுமக்கள், சிவனடியார்கள் மற்றும் கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
தமிழக வெற்றிக்குரல்