காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மதிக்கவில்லை எனக் குற்றச்சாட்டு!

தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மதிக்காமலும், பொதுமக்களின் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்காமலும் இருப்பதாகக் குற்றம்சாட்டி, வட்டார வளர்ச்சி அலுவலகப் பொது தகவல் அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களைக் கண்டித்து, சட்டத் தூண்கள் இயக்கத்தின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மற்றும் பொதுமக்களின் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இயக்க நிர்வாகிகள் பங்கேற்பு

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டத் தூண்கள் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் குமரவேல், முத்து, சட்டத் தூண்கள் இயக்கத்தின் மாநில துணைச் செயலாளர் நாகராஜ், மாவட்டத் தலைவர் பி.கே. சிவா, மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் கௌதம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் ரகுபதி, ஒன்றிய செயலாளர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.

மேலும், ராமமூர்த்தி, கிஷோர், கணபதி, சதீஷ்குமார், கிருபா, பச்சையப்பன், சின்னசாமி, முனியப்பன், அழகுபெருமாள், காந்தி, ராஜா, முருகேசன் உள்ளிட்ட இயக்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பொதுமக்களின் புகார்களுக்கு உரிய தீர்வு காணவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான கடமைகளை முறையாக நிறைவேற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Leave a Reply