பாலக்கோட்டில் கே.ஜி.எம். குழுமத்தின் புதிய பாரத் பெட்ரோல் பங்க் திறப்பு விழா!
தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எர்ரானஅள்ளியில், கே.ஜி.எம். குழும நிறுவனங்கள் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ நரசிம்மன் பியூல்ஸ் பாரத் பெட்ரோலியம் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
தருமபுரி – ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தப் பெட்ரோல் பங்க், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் தொழிலதிபர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல் விற்பனையைத் தொடங்கி வைத்த நிர்வாகிகள்
விழாவுக்குப் பாலக்கோடு கே.ஜி.எம். குழுமத்தைச் சேர்ந்த மருத்துவர் பாலகிருஷ்ணன் மற்றும் மருத்துவர் மோகனப்பிரியா ஆகியோர் தலைமை வகித்து, முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தனர். புதிதாகத் தொடங்கப்பட்ட ஸ்ரீ நரசிம்மன் பியூல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் இயக்குநருமான தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், லாரி உரிமையாளர்கள் மற்றும் பலர் திரளாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புப் பரிசுகள்
புதிய பெட்ரோல் பங்க் திறப்பு விழாவை முன்னிட்டு, அங்கு பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கிய வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
பாலக்கோடு அருகே புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளதால், தருமபுரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இது கூடுதல் எரிபொருள் நிரப்பும் வசதியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக்குரல்